ஆப்பிரிக்காவின் செனிகல் நாட்டைச் சேர்ந்தவர் கபி லேம். 22 வதான இவர் சிறு வயதிலேயே இத்தாலிக்கு குடிபெயர்ந்து, அங்கு தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தார்.
கரோனா ஊரடங்கு காரணமாக இவரது வேலை பறிக்கப்பட்டது. வேலையின்றி ஒரு வேளை உணவிற்கே தவித்துவந்தார். எப்போதும் சுறுசுறுப்புடன் இருக்கும் இவருக்கு வீட்டில் நாள் முழுக்க சும்மா இருக்க முடியவில்லை.
அதனால் பொழுதுபோக்கிற்காக டிக் டாக் கணக்கை தொடங்கி, வீடியோக்களை பதிவேற்றிவந்தார். இவரின் பெரும்பாலான வீடியோக்களில் வார்த்தைகளே இருக்காது, அப்படி இருந்தும் பாலோயர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே போனது.
எப்படி என்று பார்த்தால், வெறும் முகபாவனைகளை மட்டும் வைத்தே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை இவர் உருவாக்கியிருக்கிறார். அப்படி இவரை தற்போது 10 கோடி பேர் பாலோ செய்கிறார்கள். இதன் மூலம் இவர் ஆண்டுக்கு கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறார்.
இதையும் படிங்க:மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ள வேண்டும் - சமந்தா ஸ்டோரி