தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கிரேக்கத்தின் முதல் பெண் பிரதமராக உயர் நீதிமன்ற நீதிபதி தேர்வு - Top judge set to become first female president

கிரேக்கத்தின் முதல் பெண் பிரதமராக உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் பதவியேற்கவுள்ளார். இரண்டு எதிர்கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

Katerina Sakellaropoulou to become first female president
Katerina Sakellaropoulou to become first female president

By

Published : Jan 22, 2020, 6:06 PM IST

உயர் நிர்வாக நீதிமன்றமாக கருதப்படும் மாநில கவுன்சிலின் தலைவராக 15 மாதங்கள் பணியாற்றியுள்ளார் 63 வயதான கத்ரினா சக்கெல்லரோபௌலோ. இவர் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் 300 வாக்குகளுக்கு 200 வாக்குகள் எடுத்துள்ளார் என ஸ்டெலியோஸ் பெட்சாஸ் என்னும் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து மைய- இடது எதிர்கட்சிகள் இரண்டும் இவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.

கிரேக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை வரலாற்றிலேயே மிக குறைவாக இருந்துள்ளது. தற்போதைய கிரேக்க அமைச்சரவையில் 18 முக்கிய பொறுப்புகளில் ஆண்கள் மட்டுமே உள்ளனர். 5 ஆண்டுகள் ஆட்சிக் காலமாக கருதப்படும் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், 69 வயதான பழமைவாத அரசியல்வாதியான தற்போதைய பிரதமர் ப்ரோக்கோபிஸ் பவ்லோபௌலோஸ்ஸை பின்னுக்குத் தள்ளி கத்ரினா சக்கெல்லரோபௌலோ ஆட்சியைப் பிடிப்பார்.

இதையும் படிங்க: ராஜஸ்தானில் விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்திய வெட்டுக்கிளிகள்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details