காஷ்மீர் விவகாரத்தை அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டுசென்றார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது இந்தியாவின் உள்விவகாரம் சம்பந்தப்பட்டது என இந்திய அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் தலையிடப் பிற நாடுகள் முன்வரவில்லை. இஸ்லாமிய நாடுகள் கூட காஷ்மீர் விவகாரத்தில் தலையிடாதது வருத்தமளிப்பதாக இம்ரான்கான் தெரிவித்திருந்தார்.
ஐநா பாதுகாப்பு சபை கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு! - united nations security council
காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நாடிய நிலையில், ஐநா பாதுகாப்பு சபை கவுன்சிலின் ரகசியக் கூட்டம் இன்று நடந்துவருகிறது. இதில் சீனாவை தவிர்த்து மற்ற நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு கரம் நீட்டவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், சீன அரசின் உதவியுடன் கொண்டு சென்றார். இது குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இன்று ஆலோசனை நடந்துவருகிறது. ஐநா பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளும், 10 தற்காலிக உறுப்பு நாடுகளும் இதில் பங்கேற்றுள்ளனர். மேலும் இது ரகசிய ஆலோசனையாக நடத்தப்படும் என்றும் இந்த சபையின் எந்த அறிக்கைகளும் பதிவு செய்யப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின் படி, காஷ்மீர் விவகாரம் இந்தியா - பாகிஸ்தான் மட்டுமே பேசி தீர்க்க வேண்டியது என்று ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் கைவிரித்திருக்கின்றன. ஆனால், இக்கருத்திற்குச் சீனா உடன்படவில்லை என்று வெளிவட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.