விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது தொடர்பான விசாரணையை நவம்பர் மாதம் வரை ஒத்திவைத்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அசாஞ்சே தரப்பு வழக்கறிஞர், ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைப்பது மருத்துவ ரீதியாக ஆபத்தானது என வாதிட்டார்.
அசாஞ்சேவை சுவீடனிடமோ அமெரிக்காவிடமோ ஒப்படைப்பது குறித்து தீர்மானிக்க மே 18ஆம் தேதி விசாரணைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்து விசாரணைகள் நவம்பர் 2ஆம் தேதி தொடங்கும் என்று லண்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.