தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

விடுதலை நாளில் ரோமில் வட்டமடித்த இத்தாலியின் சிறப்பு விமானப்படை!

ரோம்: விடுதலை தினத்தை (Liberation Day) கொண்டாடும் விதமாக இத்தாலியின் சிறப்பு அக்ரோபேட்டிக் விமானப்படை பிரிவினர், இத்தாலிய கொடியின் வண்ணங்களை வானம் முழுவதும் ரோம் நகரில் பரப்பினர்.

sd
dsd

By

Published : Apr 27, 2020, 4:27 PM IST

இத்தாலியில் நடைபெற்ற நாஜி ஆக்கிரமிப்பின் முடிவைக் குறிக்கும் வகையில், இத்தாலி தலைநகரமான ரோமில் ஆண்டுதோறும் ஏப்ரல் 25ஆம் தேதி "ஃப்ரீஸ் ட்ரிகோலோரி" ( Frecce Tricolori) என்று அழைக்கப்படும் விமானப்படை குழுவினர், வானத்தில் வட்டமடித்து வெற்றியை கொண்டாடுவார்கள்.

அந்த வகையில், இந்தாண்டும் இத்தாலியின் சிறப்பு அக்ரோபேட்டிக் விமானப்படை பிரிவினர் (special acrobatic air force) இத்தாலிய கொடியின் வண்ணங்களை வானம் முழுவதும் ரோம் நகரில் பரப்பி, வெற்றியை மக்களுக்குத் தெரிவித்தனர். பைலட்கள் விமானத்தில் ஏறி, ஹெல்மேட் அணிவது வரை முகக்கவசங்கள் அணிந்திருந்தனர்.

ரோமில் வட்டமடித்த இத்தாலியின் சிறப்பு விமானப்படை

விமானங்கள் வானத்தில் வட்டமடிப்பதற்கு முன்பாக, வழக்கமாக ரோமில் உள்ள பியாஸ்ஸா வெனிசியாவில் உயர் ராணுவ அலுவலர்கள் முன்னிலையில் அனைத்து ராணுவப் படைகளின் அணிவகுப்பும் நடைபெறும். ஆனால், இந்தாண்டு வைரஸ் தொற்று காரணமாக ராணுவ அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக, இத்தாலியின் ஜனாதிபதி செர்ஜியோ மட்டரெல்லா, சிப்பாய்களின் கல்லறைக்கு முன்னால் தனியாக நின்று மரியாதை செலுத்தினார்.

இதையும் படிங்க:சவுதியில் சிறார்களுக்கு விதிக்கப்படும் மரண தண்டனை ரத்து!

ABOUT THE AUTHOR

...view details