கரோனா வைரஸ் நோய் உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திவருகிறது. சீனாவின் ஹூபே மாகாணத்தின் வூஹான் நகரில் முதலில் பரவிய கரோனா வைரஸ், சீனாவின் மற்ற மாகாணங்களுக்கும் மிக வேகமாகப் பரவியது.
இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்நோயால் கடுமையாகப் பாதிப்படைந்தன. இதனிடையே, உயிரிழந்தோரின் எண்ணிக்கை இத்தாலியில் பத்தாயிரத்தை தாண்டியுள்ளது. நேற்று மட்டும் 889 பேர் உயிரிழந்தனர்.
மொத்தமாக, 10,023 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 92,472 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் ஆறு லட்சத்து 63 ஆயிரத்து 740 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆயிரத்து 879 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 750 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாயிரத்து 227 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினில் 73 ஆயிரத்து 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்தாயிரத்து 982 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் 81 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்ட போரிஸ் ஜான்சனிடன் பேசிய அதிபர் ட்ரம்ப்!