சீனாவின் வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத் தொடங்கிய கோவிட்-19 தொற்று தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவிவருகின்றன. உலகளவில் இத்தொற்றால் 1,83,441 பேர் உயிரிழந்துள்ளனர்.குறிப்பாக, அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயினில்தான் இத்தொற்றால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இத்தாலியில் கடந்த இரண்டு மாதங்களாக அதிகரித்துவந்த உயிரிழப்புகள் சமீப நாள்களாக குறையத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், நேற்று ஒருநாளில் இத்தொற்றால் 437 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 85ஆக அதிகரித்துள்ளது. அந்நாட்டில் முதல் உயிரிழப்புச் சம்பவம் மிலன் நகரில் கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி நிகழ்ந்தது கவனத்துகுரியது.