புதிய கரோனா வைரஸான கோவிட்-19 தொற்றுநோயை கட்டுப்படுத்த அடுத்த மாதம் (மே) 3 ஆம் தேதி வரை நாடு பூட்டப்பட்டிருக்கும் என்று இத்தாலி பிரதமர் கியூசெப் கோன்டே அறிவித்தார். இருப்பினும் அடுத்த வாரம் முதல் சிறிய எண்ணிக்கையிலான வணிகங்கள் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இத்தாலி பிரதமர் கியூசெப் கோன்டே தொலைக்காட்சியில் தோன்றி அந்நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “இது ஒரு கடினமான மற்றும் அவசியமான முடிவாகும். அதற்காக நான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன். ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு பிறகு கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று முன்னதாக அறிவித்திருந்தேன்.
ஆனால் இது சரியான சமிக்ஞை அல்ல என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த புதிய தொற்றுநோயை சமாளிப்பதில் நாடு சரியான திசையில் பயணிக்கிறது. கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போரில் நாம் 18 ஆயிரத்து 849 உயிர்களை இழந்துள்ளோம். நம் மக்களின் இறப்புகள் உலகை வழிநடத்துகின்றன.
நாம் தைரியமாக இருக்க வேண்டிய தருணமிது. வருகிற 13ஆம் தேதிக்கு பின்னர் சில கடைகள் நடத்த அனுமதிக்கப்படும். ஈஸ்டர் பண்டிகை கொண்டாடும் இந்நேரத்திலும், மே தின வார இறுதி நாள்களில் நாம் கவனத்துடன் பயணிக்க வேண்டும்.