சீனாவின் வூஹான் மாகாணத்திலுள்ள ஹூபே நகரில் முதலில் பரவத் தொடங்கிய கோவிட் 19 (கொரோனா வைரஸ்) தொற்றின் காரணமாக இதுரை மூன்றாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சீனாவில் கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது குறைந்துவந்தாலும், மற்ற நாடுகளில் வேகமாகப் பரவிவருகிறது.
அதிலும் குறிப்பாக ஐரோப்பாவிலேயே இத்தாலிதான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்றை தடுக்க அந்நாட்டு அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.