ரோம்:இத்தாலியைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க ஊழியர் ஒருவர் கரோனா தடுப்பூசி செலுத்திகொள்ள அருகிலுள்ள முகாமிற்கு நேற்று(டிச.3) சென்றுள்ளார். அவருக்கு தடுப்பூசி செலுத்த முயன்ற செவிலி, அவரது தோல் ரப்பரைப் போன்று வித்தியாசமாகவும் குளிர்ச்சியாகவும் இருப்பதை அறிந்து சந்தேகமடைந்தார்.
உடனே இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதனடிப்படையில், அவரிடம் விசாரணை நடத்திய காவலர்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ள விருப்பம் இல்லாததால், சான்றிதழ் பெற சிலிகான் மோல்டால் தனது கைகளை மூடிக் கொண்டு வந்துள்ளதை கண்டுபிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.