தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

முதல் முறையாக அமீரகம் செல்கிறார் இஸ்ரேல் பிரதமர்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரக நாடான துபாய், அபுதாபி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கிறார்.

Benjamin Netanyahu Benjamin Netanyahu visit to Abu Dhabi Israeli Prime Minister Israel UAE ties இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு துபாய்
Benjamin Netanyahu Benjamin Netanyahu visit to Abu Dhabi Israeli Prime Minister Israel UAE ties இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு துபாய்

By

Published : Mar 11, 2021, 10:04 AM IST

ஜெருசலேம்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (யூஏஇ) வரலாற்று சிறப்பு மிக்க பயணம் மேற்கொள்ளும் நிலையில் அங்கு பட்டத்து இளவரசர் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்து பேசுகிறார்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமீரக பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைப் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் இது நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க பயணமாக இருக்கும் என்று கூறினார்.

எனினும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பெஞ்சமின் நெதன்யாகு பயணம் மேற்கொள்ளும் தேதி, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்து எவ்வித தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இதற்கிடையில், நெதன்யாகு துபாய் பட்டத்து இளவரசர் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்திப்பதை இஸ்ரேலிய ஊடகங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

கடந்தாண்டு ஆகஸ்டில் இஸ்ரேலுடன் தூதரக உறவு கொண்ட இஸ்லாமிய நாடுகளான எகிப்து, ஜோர்டான் வரிசையில் அமீரகமும் இணைந்தது. தற்போது இரு நாடுகளும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துவருகின்றன.

இதையும் படிங்க: போராட்ட களமாக தொடரும் ஜெருசலேம்!

ABOUT THE AUTHOR

...view details