தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

Omicron spread: இஸ்ரேலில் தீயாய் பரவும் ஒமைக்ரான் - ஒமைக்ரான் அண்மை செய்திகள்

இஸ்ரேலில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளிடம் ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.

ஒமைக்ரான்
ஒமைக்ரான்

By

Published : Dec 26, 2021, 12:30 PM IST

இஸ்ரேல் நாட்டில் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. அந்நாட்டில் நேற்று புதிதாக 591 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அந்நாட்டின் மொத்த பாதிப்பு ஆயிரத்து 118ஆக உயர்ந்துள்ளது. பாதிப்புக்குள்ளான நபர்களில் 723 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

மேலும், அறிகுறியுடன் உள்ள 861 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலில் இதுவரை 13 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை எட்டாயிரத்து 241ஆக உள்ளது.

ஆப்ரிக்க நாடுகளை தொடக்கமாகக் கொண்டு பரவத்தொடங்கியுள்ள ஒமைக்ரான் தொற்று ஐரோப்பிய நாடுகளில் காட்டுத் தீயாய் பரவிவருகிறது. பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இதுவரை இல்லாத வகையில் தினசரி பாதிப்புகள் பதிவாகிவருகின்றன. ஆஸ்திரேலியாவில் புதிதாக ஒன்பதாயிரத்து 605 பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க:Omicron India update: அதிகரிக்கும் ஒமைக்ரான் பரவல்; கட்டுப்படுத்த புதிய தடுப்பூசி திட்டம்

ABOUT THE AUTHOR

...view details