தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சர்வதேச நீதி தினம்- குற்றவியல் நீதிமன்றம் வரலாறு! - International Justice Day

இன்று (ஜூலை 17) சர்வதேச நீதி தினம் கொண்டாடப்படும் நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வரலாறு மற்றும் செயல்பாடுகள் குறித்து பார்க்கலாம்.

International Justice Day - 17 july
International Justice Day - 17 july

By

Published : Jul 17, 2021, 8:59 AM IST

ஹைதராபாத்: சர்வதேச நீதி தினம் 1998 ஜூலை 17 ஆம் தேதி ரோம் சட்டத்தை வரலாற்று ரீதியாக ஏற்றுக்கொண்டதை நினைவுகூர்கிறது.

அதாவது இந்தச் சட்டத்தின் மூலம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2002ஆம் ஆண்டு ஜூலை மாதம் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் நிறுவப்பட்டது. இந்த ரோம் ஒப்பந்தத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கையெழுத்திடவில்லை.

1998இல் இந்தியா, சீனா உள்ளிட்ட சுமார் 40 நாடுகள் இந்த ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. அமெரிக்கா, இஸ்ரேல், சூடான், ரஷ்யா ஆகிய நாடுகள் முதலில் கையெழுத்திட்டாலும் பிற்காலங்களில் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொண்டன.

இந்த நாடுகள் எல்லாம் தற்போது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினராகவும் இல்லை. அப்போது இந்தியா தரப்பில் இரண்டு எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன.

அதில் குறிப்பாக, உறுப்பு நாடுகள் அல்லாத நாடுகளையும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விசாரணைக்கு உள்படுத்தலாம் என்பதை இந்தியா கடுமையாக எதிர்த்தது. அடுத்து, அணு ஆயுத குறைப்பு சட்டத்தின்கீழ் வரவில்லை. இதிலும் இந்தியா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது.

பொதுவாக சர்வதேச நீதி தினம், தண்டனைக்கு எதிரான போராட்டத்தைத் தொடர்வதற்கும், போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைக் கொண்டுவருவதன் முக்கியத்துவத்தையும் குறிக்கிறது.

இந்நாளில் நீதிக்கு ஆதரவளித்த நாடுகள், நீதியை நிலைநாட்டிய மாநிலங்கள், ஐ.நா. உறுப்பு நாடுகள், உறுப்பினர்களின் பங்களிப்பும் நினைவு கூரப்படும். இத்தினத்தின் நோக்கம், ஒரு நாட்டில் நடக்கும் கொடுமைகளை தட்டிக் கேட்பதும், நீதிமுறைப்படி வழக்குகளை வாதாடி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே ஆகும்.

சர்வதேச நீதி தினம் குறித்து கூட்டணி தலைவர் வில்லியம் ஆர் பேஸ் கூறுகையில், “கடந்த 20 ஆண்டுகளில் சர்வதேச குற்றவியல் நியாயத்தை வலுப்படுத்துவது, குறிப்பாக ரோம் சட்டத்தை ஏற்றுக்கொள்வது குறித்து விவாதிக்கப்படும். மேலும், அமைதி மற்றும் பரிணாம வளர்ச்சிக்காக சர்வதேச குற்றவியல் நீதி மற்றும் இந்த மாபெரும் நீதிமன்றத்தின் புதிய அமைப்பை நிறுவுதல் ஆகியவையும் கவனத்தில் கொள்ளப்படும்” என்றார்.

இதையும் படிங்க : ’மாற வேண்டியது சமூகம்தான்’ - LGBTQIA+ சமூகத்தினர் குறித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கிய நீதிபதி!

ABOUT THE AUTHOR

...view details