தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சர்வதேச வான வேடிக்கை திருவிழா: கோலாகலமான ரஷ்யா! - ரஷ்யா

எட்டு நாடுகள் பங்கேற்ற சர்வதேச வான வேடிக்கை திருவிழாவில், ரஷ்யா முதலிடம் பிடித்துள்ளது.

firework

By

Published : Aug 22, 2019, 3:37 AM IST

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சர்வதேச வான வேடிக்கை திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடம் நடைபெற்ற திருவிழாவில் எட்டு நாடுகள் கலந்துகொண்டது. பத்து நிமிடமே நடைபெறும் இந்த வான வேடிக்கை திருவிழாவை கண்டு களிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர்.

வானில் சென்று கண் இமைக்கும் நேரத்தில் மறையும் வான வேடிக்ககையைக் காண மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர். வான வேடிக்கை மட்டுமல்லாமல் இசையுடன் சேர்ந்து வானில் பூ போன்று மின்னிய வெடிகள் காண்போரை உற்சாகப்படுத்தியது.

இந்நிலையில், சர்வதேச வான வேடிக்கை திருவிழாவில் ரஷ்யா முதலிடம் பிடித்துள்ளது, போர்ச்சுகள் இரண்டாமிடமும், இத்தாலி மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details