இந்தியாவில் நிலவும் கோவிட்-19 இரண்டாம் அலை பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனம் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர், "இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன; உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இது கவலைக்குரிய அம்சமாகும்" என்றார்.
தொடர்ந்து அவர், "இந்த இக்கட்டான சூழலில் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டிய சர்வதேச சமூகத்திற்கு நன்றி. இந்தியா போன்ற ஆசிய நாடுகள் மட்டுமல்ல, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகள், ஆப்ரிக்க நாடுகளிலும் தொற்றின் தீவிரம் தொடர்ந்து உள்ளது.