டெல்லி:2016இல் இந்தியாவைச் சேர்ந்த ஆஷா ராணி 'தி ஐயன் குயின்' (The iron queen) என்ற பட்டத்தை தன்னுடைய சாதனையால் பெற்றார். தன்னுடைய தலை முடி சடையால் மிகக் கனமான வாகனத்தை இழுக்கும் தனது சாதனையைத் தானே முறியடித்தார். ஆஷா ஒரு பெரிய டபுல் டக்கர் பேருந்தை இத்தாலியின் மிலனில் உள்ள ‘லோ சோ டேய் ரெக்கார்ட்’ (Lo show dei record) என்ற நிகழ்ச்சியில் செய்தார்.
ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வைரல்
ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இந்தக் காணொலி மீண்டும் இணையத்தில் வைரலாகிவருகிறது. இதுவரை 3.6 லட்சத்திற்கு மேலாக பார்வையும் பல கமெண்ட்டுகளையும் பெற்றுள்ளது.
அந்தக் காணொலியில், ஆஷாவின் தலைமுடி இறுக்கமாகப் பேருந்தில் கட்டப்பட்டுள்ளது. அனைத்துப் பார்வையாளர்களும் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் எப்படி இது சாத்தியமாகும் என்று காண்பதற்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.
அதன்பின் ஆஷா தனது முடியை வைத்து அவ்வளவு பெரிய பேருந்தை இழுப்பதைக் கண்டதும் பார்வையாளர்கள் அனைவரும் கரகோஷமிட்டும், கூச்சலிட்டும் ஆஷாவை உற்சாகப்படுத்துகின்றனர். அதன்பின் ஆஷா கின்னஸ் ரெக்கார்டு செய்து முடிக்கிறார்.