இதுதொடர்பாக இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், உருமாறிய கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையக இங்கிலாந்தில் ஐந்தாம் கட்ட கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்பொருட்டு, இங்கிலாந்தில் அனைத்து தூதரக சேவைகளும் பிப்ரவரி 20ஆம் தேதிவரை நிறுத்தி வைக்கப்படுகிறது.
கரோனா அச்சுறுத்தல்: இங்கிலாந்தில் தூதரக சேவையை நிறுத்தி வைத்த இந்தியா! - இந்திய தூதரகம்
லண்டன்: இங்கிலாந்தில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, அனைத்து தூதரக சேவைகளும் பிப்ரவரி 20ஆம் தேதிவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான தொற்றுநோய்களுக்கு மத்தியில், இங்கிலாந்தில் முதன்முதலில் காணப்பட்ட உருமாறிய கரோனா வைரஸ் உலக நாடுகளை மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் இது முன்பிருந்த கரோனா வகைகளைவிட அதிகளவில் வேகத்துடன் பரவக்கூடிய தன்மையுடையது என்று கூறப்படுகிறது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இங்கிலாந்தில் இதுவரை 27 லட்சத்து 82 ஆயிரத்து 709 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், மேலும், தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 76 ஆயிரத்து 428 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.