தமிழ்நாடு

tamil nadu

6 லட்சம் ஏ.கே - 47 203 ரகத் துப்பாக்கிகள் இந்தியாவில் உற்பத்தி - ரஷ்யாவுடன் புதிய ஒப்பந்தம்

By

Published : Sep 3, 2020, 9:03 PM IST

ஏ.கே-47 203 ரகத் துப்பாக்கிகளை இந்தியாவில் உற்பத்தி செய்ய, ரஷ்யாவுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

AK-47 203 rifles
AK-47 203 rifles

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்தப் பயணத்தில் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை இரு நாடுகளும் மேற்கொண்டன. அதன்படி இந்திய ராணுவத்திற்கு தேவையான ஏ.கே-47 203 ரகத் துப்பாக்கிகளை இந்தியாவில் அதிக அளவில் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்திய ராணுவத்திற்கு சுமார் ஏழு லட்சத்து 70 ஆயிரம் ஏ.கே-47 203 ரகத் துப்பாகிகள் தேவைப்படும் நிலையில், இதில் ஒரு லட்சம் துப்பாக்கிகள் இறக்குமதி செய்யப்படும். மீதமுள்ளவை IRRPL எனப்படும் இந்தியா-ரஷ்யா கூட்டு உற்பத்தி மூலம் தயார் செய்யப்படும்.

இந்தத் துப்பாக்கிகள் உத்தரப் பிரதேச மாநிலம், கோர்வாவில் உள்ள பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையத்தில் தயார் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பயணம் முடிவதற்குள் இரு நாடுகளும் மேலும் பல ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:கரோனா சவால்களை எதிர்கொள்ள கைக்கோக்கும் இந்திய, அமெரிக்க விஞ்ஞானிகள்

ABOUT THE AUTHOR

...view details