பிரிட்டன் நாட்டின் இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியின் இளைய மகன் லூயிஸின் 2ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது அழகிய புகைப்படங்களை கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ளது.
அந்தப் புகைப்படங்களில், குட்டி இளவரசரின் கைகள் வானவில்லின் வண்ணங்களால் அழகுற நிரம்பப் பெற்றுள்ளன. இவை கரோனாவுக்கு எதிராகப் போராடும் களப்பணியாளர்களை மகிழ்விக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.