உலகம் முழுவதும் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், தற்போது பிறந்த குழந்தையையும் விட்டுவைக்காதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் பாதிப்புக்குளான அக்குழந்தை தான் கொரோனா பாதித்த உலகின் இளம் நோயாளி எனவும் கூறப்படுகிறது.
இங்கிலாந்து நாட்டில் என்ஃபீல்டில் உள்ள வடக்கு லண்டன் மருத்துவமனையில், குழந்தையின் தாயார் பிரவசத்திற்குக் குறிப்பிட்டுள்ள தேதிக்கு சில நாள்களுக்கு முன்பு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்தத் தாயாரின் பரிசோதனை முடிவு வருவதற்கு முன்பே அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் குழந்தையின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதுசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, உடனடியாகப் பிறந்த குழந்தைக்கும் மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தாயின் வயிற்றிலிருந்தபோது கொரோனா வைரஸ் குழந்தையை தாக்கியதா அல்லது பிறக்கும்போது தொற்றுநோய் பரவியதா என்பது குறித்து தெளிவான தகவல் தெரியவில்லை.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா வைரல் பாதிப்புள்ள இரண்டு நோயாளிகளில், ஒருவர் சிறப்பு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். மற்றொரு நபர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் சிகிச்சை பெற்று வருகிறார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கொரோனா அச்சுறுத்தல்: இத்தாலியைத் தொடர்ந்து ஸ்பெயினிலும் அவசர நிலை அறிவிப்பு!