தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

நார்விக் தேவாலயத்தில் சருக்கு மரம் - குழந்தைகள் மத்தியில் வரவேற்பு - நார்விக்

லண்டன்: பிரிட்டனில் சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த நார்விக் தேவாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சருக்கு மரம், பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

cathedral

By

Published : Aug 10, 2019, 12:01 PM IST

பிரிட்டனின் நார்விக் நகரில் 874 ஆண்டுகள் பழமைவாய்ந்த நார்விக் தேவாலயம் உள்ளது. மிகவும் பிரசித்திப் பெற்ற இந்த தேவாலயத்திற்கு ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

இந்நிலையில், பக்தர்களை ஈர்க்கும் விதமாக நார்விக் ஆலயத்தின் நடுக்கூடத்தில் ஹெட்டர் ஸ்கென்டர் என்ற சருக்கு மரம் அமைக்கப்பட்டுள்ளது.

சருக்கு மரத்தின் கட்டுமான பணி

55 அடி உயரம் கொண்ட இந்த சருக்கு மரத்தை, நான்கு பேர் கொண்ட குழு இரண்டு நாட்களில் கட்டிமுடித்துள்ளனர். நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்த சருக்கு மரம், பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைவரும் இந்த சருக்கு மரத்தில் விளையாடி வருகின்றனர்.

கண்கவர் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஆலயத்தின் மேற்கூரையை பக்தர்கள் பார்ப்பதற்காக, இந்த சருக்கு மரம் கட்டப்பட்டுள்ளது என நார்விக் தேவாலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details