தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஹாரி-மேகன் தம்பதியின் பொறுமையைச் சோதிக்கும் பிரிட்டன் பத்திரிகைகள் ! - UK former prince Harry

லண்டன்: தங்களைப் பற்றி தவறான கட்டுரைகளை வெளியிடும் பிரிட்டன் பத்திரிகைகளுடன் ஒத்துழைக்க மாட்டோம் என அந்நாட்டு இளவரசர் ஹாரி, அவரது மனைவி மேகன் மெர்கல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

MEGHAN , MARKEL
MEGHAN , MARKEL

By

Published : Apr 20, 2020, 11:07 PM IST

பிரிட்டன் ராணி எலிபெத்தின் பேரனும் இளவரசருமான ஹாரி 2018ஆம் ஆண்டு, தன் காதலியும் அமெரிக்க நடிகையுமான மேகன் மெர்கலை திருமணம் செய்துகொண்டார்.

இத்தம்பதி குறித்து பிரிட்டன் செய்தித்தாள்களில் அவ்வப்போது வெளியாகும் விமர்சனக் கட்டுரைகள், செய்திகள் இவர்களின் பொறுமையை சோதித்து வருகின்றன.

இந்நிலையில், தங்களைப் பற்றி தவறான, உண்மைத் தன்மையற்ற, தனியுரிமை அத்துமீறும் கட்டுரைகளை வெளியிடும் பத்திரிகைகளுடன் ஒத்துழைக்கமாட்டோம் என ஹாரி-மேகன் தம்பதி தற்போது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் செய்தித்தாள்களான தி சன், தி டெய்லி மெயில், தி டெய்லி எக்ஸ்பிரஸ், தி டெய்லி மிரர் ஆகிய செய்தித்தாள்களுக்கு தம்பதி எழுதிய கடிதத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளதாக அவர்களின் செய்தித் தொடர்பாளர் கூறினார்..

பிரிட்டன் இளவரசர் ஹாரி , இளவரசி மேகன்

தன் தாயும், இளவரசியுமான டயானா உயிரிழந்ததற்கு பத்திரிகைக்காரர்களே காரணம் எனக் கூறும் இளவரசர் ஹாரி, தன் சிறுவிதியிலிருந்தே பத்திரிக்கைகளை வெறுப்புணர்வோடு பார்த்து வருகிறார்.

ஹாரி-மேகன் கடந்த மார்ச் 31ஆம் தேதி, தங்களின் ராஜப் பொறுப்புகளைத் துறந்துவிட்டு தற்போது கலிபோர்னியாவில் வசித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : கூட்டத்தை தவிர்க்க 10 ஆயிரம் மலர்களை பூக்கச்செய்த ஜப்பான்!

ABOUT THE AUTHOR

...view details