தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கரோனாவுக்கு எதிராக மற்ற நாடுகளுக்கு உதவிக்கரம் நீட்டிவரும் இந்தியா! - India helps Brazil

நியூயார்க்: கரோனா பரவலைத் தடுக்க பிற நாடுகளுக்கு மருத்துவ, பொருளாதார ரீதியாக உதவும் இந்தியாவிற்கு தலைவணங்குவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.

Guterres 'salutes'
Guterres 'salutes'

By

Published : Apr 18, 2020, 12:29 PM IST

உலகையே அச்சுறுத்திவரும் கரோனாவை எதிர்கொள்ளும் பல நாடுகளுக்கு இந்தியா மருத்துவ ரீதியாக உதவுவது குறித்து, ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளர் டுஜாரிக்,

"கரோனா வைரசிற்கு எதிரான போராட்டத்தில் உலகளாவிய ஒற்றுமைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் அழைப்புவிடுத்திருந்தார். இந்தத் தருணத்தில் மற்ற நாடுகளுக்கு உதவிசெய்யும் நாடுகளை வணங்குவதாக அவர் கூறினார்" என்று தெரிவித்தார்

மேலும், பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசியா அமைப்பின் (சார்க்) உறுப்பு நாடுகளுக்கு உதவ இந்தியா முன்வந்துள்ளதுடன், அமெரிக்கா, பிரேசில், இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பியுள்ளது. இந்தியா தனது ராணுவ சுகாதார வல்லுநர்களை குவைத், மாலத்தீவுக்கு அனுப்பியுள்ளது.

இதையும் பார்க்க: பரிசோதனை மையத்திலிருந்து வெளியேறியது கரோனா? ட்ரம்ப் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details