பருவநிலை மாற்றம் குறித்து ஆய்வாளர்கள் கூறுவதை அரசியல்வாதிகள் கேட்க வேண்டும் எனக்கூறி விருதுகளை மறுப்பது, ஐநா மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்பை முறைப்பது என்று கடந்த ஒரு ஆண்டாக உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிரேட்டா தன்பெர்க்.
உலக வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கடந்த 2019ஆம் ஆண்டு ஸ்வீடன் நாடாளுமன்றம் முன்பு தனியொரு ஆளாகப் போராட்டத்தைத் தொடங்கினார்.
அதைத் தொடர்ந்து "Friday for Future" என்று இவர் தொடங்கிய போராட்டத்தில் உலகெங்கும் இருந்து பல லட்சம் மாணவர்கள் இணைந்து கொண்டனர். பருவநிலை மாற்றம் குறித்த பரப்புரைகளை மேற்கொள்ள ஏதுவாக பள்ளிப்படிப்பை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைவிட்டார்.