புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து குரல் எழுப்பிவரும் ஸ்வீடன் சிறுமி கிரேட்டா தன்பெர்க் (15). 2018-ல் ஸ்வீடன் நாடாளுமன்றம் முன்பு தனியாளாகத் தன் போராட்டத்தைத் தொடங்கிய கிரேட்டா, பருவ நிலை மாற்றம் குறித்து உலகம் முழுவதும் நடக்கும் மாணவர்களின் போராட்டத்தின் முகமாக உருவெடுத்துள்ளார். செப்டம்பரில் நடந்த ஐநா பருவநிலை மாநாட்டில் உலகத் தலைவர்களை விமர்சித்து கிரேட்டா பேசியது உலக அரங்கில் பேசுபொருளானது.
இதையும் படிங்க :"உலகம் அழிவதைவிட பணம்தான் உங்களுக்கு முக்கியம்" - ஐநாவில் சீறிய சிறுமி!
இந்நிலையில், கிரேட்டா தன்பெர்க்கின் முனைப்பை ஊக்குவிக்கும் விதமாக டச் குழந்தைகள் உரிமை அமைப்பு அவருக்கு குழந்தைகளுக்கான அமைதி விருதை வழங்கியுள்ளது.