காலநிலை மாற்றம் தொடர்பாக அண்டார்டிகா, கிரீன்லாந்தில் உள்ள பனிப் படலங்களில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து செயற்கைக்கோள் மூலம் ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மேற்குறிப்பிட்ட துருவப் பகுதிகளில், பனிப் படலங்கள் 90-களில் இருந்ததை விட, சுமார் ஆறு மடங்கு வேகமாக உருகி வருவதாக ஆய்வுக் குழு ஒன்று அதிர்ச்சித் தரும் தகவலை வெளியிட்டுள்ளது.
ஐஸ் ஷீட் மாஸ் பேலன்ஸ் இண்டர்-கம்பாரிசன் எக்சர்சைஸ் (Ice Sheet Mass Balance Inter-comparison Exercise or IMBIE) என்ற ஆய்வுக் குழுவைச் சேர்ந்த பேராசிரியர் ஆண்ட்ரூ ஷேபர்ட் கூறுகையில், "1992 - 2017 காலகட்டத்தில் கிரீன்லாந்து, அண்டார்டிகா பகுதிகள் 6.4 ட்ரில்லியன் டன் பனி உருகியுள்ளது.
அப்படிப் பார்த்தால் உலகளவில் கடல் மட்டும் 17.8-ஆக உயர்ந்திருந்திருக்கும். இது நல்ல செய்தி அல்ல.