உலகளவில் கரோனா பரவல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இதுவரை நான்கு கோடியே 37 லட்சத்து 76 ஆயிரத்து 587 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 64 ஆயிரத்து 515ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மூன்று கோடியே 21 லட்சத்து 79 ஆயிரத்து 748ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் நான்கு லட்சத்து 48 ஆயிரத்து 413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 ஆயிரத்து 506 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அதிகளவிலான கரோனா பாதிப்பு அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. இதுவரை அந்நாட்டில் 89 லட்சத்து 62 ஆயிரத்து 783 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 31 ஆயிரத்து 045 பேர் உயிரிழந்துள்ளனர்.