தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஊரடங்குத் தளர்வுகளால் இங்கிலாந்தில் அதிகரிக்கும் கரோனா! - England

இங்கிலாந்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்குத் தளர்வுகளால் அந்நாட்டில், கரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

global-covid-19-tracker
global-covid-19-tracker

By

Published : Jul 12, 2020, 2:14 PM IST

உலகளவில் இதுவரை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 28 லட்சத்து, 39 ஆயிரத்து 566 ஆக உள்ளது. இதில் ஐந்து லட்சத்து 67 ஆயிரத்து 574 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 74 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில்,பிரிட்டனில் மேலும் 148 கரோனா நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். இதனால் நாட்டில் மொத்த கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 798ஆக அதிகரித்துள்ளது என்று பிரிட்டிஷ் சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

நேற்றைய(ஜூலை 11) நிலவரப்படி, பிரிட்டனில், இரண்டு லட்சத்து 88 ஆயிரத்து 953 பேர் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

உலகளவில் கரோனா பாதி்ப்பு நிலவரம்

இங்கிலாந்தில் கரோனா நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இந்த வாரம் சற்று உயர்ந்துள்ளதாக அரசாங்கத்தின் அவசர நிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழு (SAGE) தெரிவித்துள்ளது.

இந்த புள்ளி விவரங்களின்படி, 0.8 முதல் 1.0 வரை பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது.

அந்நாட்டில் விடுதிகள், கேளிக்கை விடுதிகள், உணவகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்ட காரணத்தினால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கக்கூடும் எனக் கூறுகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details