தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 15, 2020, 4:16 PM IST

ETV Bharat / international

கரோனா: உலகளவில் மூன்று லட்சத்தைக் கடந்த உயிரிழப்பு!

கரோனா வைரஸ் பெருந்தொற்றால் உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது.

Global COVID-19 tracker
Global COVID-19 tracker

கடந்தாண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் பெருந்தொற்று தற்போது அந்நாட்டில் குறைந்திருந்தாலும், மற்ற நாடுகளில் வேகமாக பரவிவருகிறது. இத்தொற்றால் கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன.

இந்நிலையில், நேற்று உலகளவில் புதிதாக 96,185 பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45,45,420ஆக அதிகிரத்துள்ளது. அதேசமயம், இத்தொற்றால் நேற்று 5,207 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உலகளவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,03,372ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இத்தொற்றால் பாதிக்கப்பட்ட 44,813 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம், கரோனா தொற்றிலிருந்து இதுவரை 17,03,808 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்றால் அதிக பாதிப்புகளான நாடுகளின் பட்டியலில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 14,57,593 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 86,912 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள ஸ்பெயினில் 2,72,646 பேரும், மூன்றாம் இடத்தில் உள்ள ரஷ்யாவில் 2,52,245 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக பிரிட்டன் இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரிட்டனில் இதுவரை 33,614 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:இந்தியாவுக்கு 100 கோடி அமெரிக்க டாலர்களை வழங்கும் உலக வங்கி

ABOUT THE AUTHOR

...view details