உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு தினந்தோறும் அதிகரித்துவருகிறது. இதுவரை 1 கோடியே 15 லட்சத்து 56 ஆயிரத்து 681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 5 லட்சத்து 36 ஆயிரத்து 776 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதில், 65 லட்சத்து 35 ஆயிரத்து 492 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இத்தொற்றுக்கு எதிரான மருந்து இன்னும் கண்டறியப்படாததால், பல நாடுகள் பொதுமுடக்கத்தை நீட்டித்துவருகின்றன. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பொருளாதாரப் பாதிப்புகளைச் சந்தித்துவருகின்றன.
பொருளாதாரப் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் பொதுமுடக்கத்தில் சில தளர்வுகளை அறிவித்தன. ஆனால், அந்தத் தளர்வுகள் கரோனா வைரஸ் அதிதீவிர பரவலுக்கு வழிகோலியது.