கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டதால் உலகளவில் காற்றுமாசு அளவு 60 விழுக்காடு குறைந்துள்ளதாக பெர்லின் புவி இயற்பியல் ஆராய்ச்சியாளர்களின் இரண்டு புதிய ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளன.
இதுகுறித்து பெர்லின் ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், "காற்றின் தரம் உயர்ந்துள்ளது தற்காலிகமானது தான். வாகனங்கள் உபயோகம் எதிர்காலத்தில் அதிகமாகும்போது காற்று மாசு பெரிதும் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. கடந்த 1990ஆம் ஆண்டு முதல் காற்று மாசு அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது தான் வீழ்ச்சி அடைந்துள்ளது" என்றார்.