இதுகுறித்து ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில்,"கடந்த மார்ச் மாதத்திலிருந்து வெளிநாடுகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த பயணத்தடையை ஜூன் 15ஆம் தேதியிலிருந்து நீக்கத் திட்டமிட்டுள்ளோம்.
ஜூன் 15 முதல் பயணத்தடைகளை நீக்க ஜெர்மனி திட்டம்! - germany
பெர்லின்: ஜூன் 15ஆம் தேதியிலிருந்து பயணத்தடையை நீக்க திட்டமிட்டுள்ளதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.
தடை நீக்கப்பட்டதற்குப் பின்பு மேற்கொள்ளும் பயணத்திற்கான ஆலோசனை வழங்கப்படும். ஐரோப்பிய யூனியனில் உள்ள நார்வே, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உள்நுழைவது நீண்டகாலத்திற்கு கட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயணத்தடை நீக்கப்பட்டதற்கு பின்பு ஜெர்மனிக்கு வருபவர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் கரோனா தொற்றுப்பரவல் குறைந்துள்ள நிலையில், உணவகங்கள், விடுதிகளைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்நாட்டின் அதிபர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.