உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தப்பாடில்லை. தினந்தோறும் லட்சகணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க, ஐரோப்பா கண்டத்தில் பரவ தொடங்கிய உருமாறிய கரோனாவும், பல நாடுகளில் கால் பதித்துள்ளது. கரோனா பரவலை தடுத்திட தடுப்பூசி விநியோகிக்கும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
கரோனாவுக்கு எண்டே இல்லையா... ஜெர்மனியில் நுழைந்த மற்றொரு வகை கரோனா! - ஜெர்மனி கரோனா
பெர்லின்: கடந்தாண்டு இறுதியில் நார்வேயில் கண்டெடுக்கப்பட்ட புதிய வகை கரோனா, ஜெர்மனியிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நார்வே, லக்சம்பர்க் உள்ளிட்ட பகுதிகளில் தென்ப்பட்ட B116 எனப்படும் புதிய வகை கரோனா வைரஸ், ஜெர்மனியிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. B116 வைரஸ் கடந்தாண்டு டிசம்பர் மாத இறுதியில் கண்டறியப்பட்டது. ஆனால், அப்போது பரவக்கூடிய தன்மைக் கொண்டாதா என்பது உறுதிச்செய்யப்படாமல் இருந்தது.
இதுமட்டுமின்றி, உலகம் முழுவதும் பல வகையான கரோனா வைரஸ் சுற்றிவருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவற்றில் சில தொற்று மட்டுமே கடுமையான விளைவுகளை ஏற்படுத்து தன்மை இருக்கலாம் என சுகாதாரத் துறை தரப்பில் கூறப்படுகிறது.