ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் 24 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை அங்கு 94 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஜெர்மனி அரசு எடுத்துவருகிறது.
நேற்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலினா மெர்கல் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், "ஜெர்மனியில் வைரஸ் கட்டுப்படுத்த பொது இடங்களில் இரண்டு நபர்களுக்கு மேல் ஒன்றாகக் கூடத் தடைவிதிக்கப்படுகிறது. இந்தத் தடையிலிருந்து கூட்டுக் குடும்பமாக வாழும் மக்களு மட்டும் விலக்கு பெறுவார்கள்.
மக்கள் நினைத்தால்தான் இந்த வைரசை நாட்டிலிருந்து வெளியேற்ற முடியும். உணவகங்களிலிருந்து வீட்டுக்கு உணவை வாங்கிச் செல்வதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. மற்றபடி அனைத்து உணவகங்களும் தற்காலிமாக மூடப்படுகின்றன. மக்கள் அனைவரும் மற்றொரு நபரிடமிருந்து குறைந்தது இரண்டு மீட்டர் தள்ளி இருக்க வேண்டும்" என்றார்.
மேலும், ஐரோப்பிய மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், "ஜெர்மனியில் உள்ள மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் உயிர் காக்கும் கருவிகளுடன் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இதனால் கரோனா வைரஸ் காய்ச்சல் நோயாளிகள் அனைவருக்கும் ஜெர்மனி அரசால் சிகிச்சை அளிக்க முடிகிறது" என்றனர்.
இதையும் படிங்க:இத்தாலியில் ஒரே நாளில் 651 உயிரிழப்பு