நெதர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க், ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் மக்கள் முழுவதும் முகத்தை மூடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளன.
புர்கா அணிய தடைவிதித்த ஜெர்மனி! - பாடென்- வுர்ட்டெம்பெர்க் மாநிலம்
பெர்லின்: மேற்கு ஜெர்மனியிலுள்ள பாடென்-வுர்ட்டம்பெர்க் மாநில அரசு பள்ளிகளில் மாணவிகள் புர்கா உள்ளிட்ட முகத்தை மறைக்கும் துணிகளை அணிய தடைவிதித்துள்ளது.
german-state-bans-burqas-face-veils-in-schools
இந்நிலையில், மேற்கு ஜெர்மனியிலுள்ள பாடென்-வுர்ட்டெம்பெர்க் மாநிலம், பள்ளிகளில் மாணவிகள் புர்கா உள்ளிட்ட முகத்தை மறைக்கும் துணிகளை அணிய தடை விதித்துள்ளது. இவ்வாறு முகத்தினை மறைப்பது ஒரு சமூகம் சுதந்திரமாகச் செயல்படுவதை குறிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிமுறை, ஜெர்மனியில் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த உத்தரவிற்குத் தடைகோரி இஸ்லாமிய மக்கள் பலர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.