ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ளது கதீட்ரல் இசைக்குழு. மிகப்பழமையான இந்த இசைக்குழு 1465ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 554 ஆண்டை நிறைவு செய்துள்ள கதீட்ரல் இசைக்குழுவில் அப்போதிருந்து இப்போது வரை பெண்கள் இடம்பெறவில்லை. ஆண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.
பெண் என்பதால் இசைக்குழுவில் பாடுவதற்கு தடை! வழக்குத் தொடர்ந்த சிறுமி - musical group
பெர்லின்: தேவாலய இசைக்குழுவில் பாடுவதற்கு பெண் என்பதற்காக தடைவிதித்ததால் இசைக்குழுவினர் மீது ஒன்பது வயது சிறுமி ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
பெர்லின்
இந்நிலையில், ஒன்பது வயது சிறுமி ஒருவர் கதீட்ரல் இசைக்குழுவில் சேர்வதற்காக விண்ணப்பித்திருந்தார். கடந்த மார்ச் மாதம் அச்சிறுமி குரல் தேர்வில் மிக நேர்த்தியாகவும் அழகாக பாடியும் தேர்வாகவில்லை.
காரணம் கேட்டபோது, பெண் என்பதால் சிறுமியை சேர்க்கவில்லை என கதீட்ரல் இசைக்குழு தெரிவித்தது. இதனால் வருத்தமடைந்த சிறுமி, கதீட்ரல் இசைக்குழுவினரின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.