கரோனா வைரஸ் பெருந்தோற்று உலகளவில் கிட்டத்தட்ட ஏழு லட்சம் பேரை பாதித்துள்ளது. பலரின் உயிரைக் காவு வாங்கிய இந்த வைரஸ், பொருளாதாரத்தையும் அசைக்கத் தொடங்கியுள்ளது.
பல நாடுகளில் கரோனா வைரஸ் ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பு காரணமான அந்நாடுகளின் அரசுகளே அதிர்ந்துபோயுள்ளன. இந்நிலையில் கரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு காரணமாக மனமுடைந்த, ஜெர்மனியின் நிதியமைச்சர் தாமஸ் ஸ்கெஃபர் (54) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பிராங்பேர்ட் நகரின் அருகே ரயில் பாதையில் சனிக்கிழமை நள்ளிரவு அவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் அவர் தற்கொலை செய்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.