தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பாரிஸில் உயர்தெழுகிறார் மகாத்மா காந்தி!

பாரிஸ்: காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், முப்பரிமாண ஹாலோகிராம் வடிவில் காந்தி பங்கேற்கவுள்ளார்.

Gandhi

By

Published : Sep 20, 2019, 8:17 AM IST

மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதியை, சர்வதேச அகிம்சை தினமாக உலக நாடுகள் அனுசரித்துவருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான அகிம்சை தினத்தை முன்னிட்டு யுனெஸ்கோவின் மகாத்மா காந்தி இன்ஸ்டிடியூட் அஃப் எஜூகேஷன் ஃபார் பீஸ் அண்ட் சஸ்டேய்னபில் டெவலப்மெண்ட் (UNESCO Mahatma Gandhi Institute of Education for Peace and Sustainable Development) சார்பில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

மகாத்மா காந்தியின் தத்துவம் குறித்து நடைபெறும் இந்த கலந்துரையாடலில், முப்பரிமாண மெய்நிகர் வடிவில் (ஹாலோகிராம்) காந்தி உருவம் பங்கேற்கவுள்ளது.

இந்த ஹாலோகிராம் காந்தி அவையோருடன் சுமார் 15 நிமிடம் உரையாற்ற உள்ளார். மேலும், பார்வையாளர்கள் கேட்கும் கேள்விக்குப் பதிலளிக்கவுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details