லண்டன்:ஏழை நாடுகளுக்கு 1 பில்லியன் தடுப்பூசிகள் வழங்குவது, உலகிலுள்ள அனைவருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பெரிய முன்னெடுப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.
அனைவருக்கும் தடுப்பூசி
ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா இணைந்து தயாரித்த தடுப்பூசியின் பாத்திரத்தை இம்மாநாட்டில் குறிப்பிட்டு பேசினார். இந்தத் தடுப்பூசி இந்தியாவிலுள்ள சீரம் இன்ஸ்டியூட் மூலம் கோவிஷீல்டு தடுப்பூசியாக உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தத் தடுப்பூசியின் மூலம் உலகில் அரை பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் போரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அஸ்ட்ராஜென்கா தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் சுழிய லாபத்தில் தடுப்பூசியை தயாரிக்கிறது. அந்நிறுவனம், பல ஏழை நாடுகளுக்கு பல மில்லியன் தடுப்பூசிகளை அனுப்பியுள்ளது. சொல்லப்போனால், ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜென்கா இணைந்து தயாரித்த தடுப்பூசி கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் 96 விழுக்காடு விநியோகிக்கப்பட்டுள்ளது எனவும் போரிஸ் குறிப்பிட்டு பேசியுள்ளார்.