பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்து ஐநா சார்பில் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் பருவநிலை மாற்ற உச்சிமாநாடு (United Nations Change Conference COP25) நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 'ஃபிரைடே ஃபார் ஃபியூசர்' ( Friday For Future) என்ற பருவநிலை மாற்ற இயக்கத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் உச்சிமாநாடு நடைபெறும் வளாகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் சேர்ந்து எக்ஸ்டிங்க்ஷன் ரெபலியன் (Extintinction Rebellion) உள்ளிட்ட பருவ நிலைக் குழுக்களும் ஈடுபட்டனர்.