கரோனா வைரஸ் தொற்று காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அறிகுறிகள் இருக்கும் பலர் தனிமைப்படுத்தல் மையத்தில் வைக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இருப்பினும், கரோனா தொற்று உள்ளதா என்பதைக் கண்டறியும் சோதனை முடிவுகள் வெளிவர கால தாமதம் ஆவதால், பல்வேறு வகையான ரேபிட் சோதனைப் பக்கம் ஆராய்ச்சியாளர்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.
அந்த வகையில், மக்களிடமிருந்து உமிழ்நீரை எடுத்து ஒரு மணி நேரத்திற்குள் கரோனா பாதிப்பு உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறியும் முயற்சியில், பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இதுகுறித்து SKILLCELL ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "ஈஸிகோவ் (EasyCov) எனப்படும் உமிழ்நீரை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் ஸ்கிரீனிங் சோதனையில் கரோனா பாதிப்பு உள்ளதா என்பதை எளிதாகக் கண்டறிய முடியும். இச்சோதனைக்காக கலோரிமெட்ரிக் ரீடிங்ஸ் (colorimetric readings) வசதியைப் பயன்படுத்துகின்றனர்.