இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, பிரான்ஸ் நாட்டின் கோடீஸ்வரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆலிவர் டசால்ட்(69) சென்ற ஹெலிகாப்டர், நார்மண்டியில் உள்ள காலவ்டோஸில் சென்றுகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், டசால்ட் உயிரிழந்தார்.
விபத்துக்கு முன் டசால்ட் பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், உள்துறை அமைச்சர் ஜெரார்ட் டர்மனுடன் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இதுகுறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தனது ட்விட்டர் பக்கத்தில் "டசால்ட் ஒருபோதும் நம் நாட்டிற்கு சேவை செய்வதை நிறுத்தவில்லை. அவர் சொத்துக்களை மட்டும் மதிப்பிடுவதில்லை. அவரின் பிரிவு வருத்தமளிக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார்.