தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோவின் கல்லறையை அகற்ற முடிவு - Francisco Franco's remains to be exhumed on Oct 24

மாட்ரிட்: சர்வாதிகாரி பிரான்சிஸ்கோ பிராங்கோவின் எச்சங்கள் கல்லறையில் இருந்து தோண்டி அகற்றப்படவுள்ளன.

Francisco Franco's remains to be exhumed on Oct 24

By

Published : Oct 21, 2019, 11:42 PM IST

ஸ்பானியா உள்நாட்டுப் போர், 1939ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்கி ஜூலை 17ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இப்போரில் இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பிரான்சிஸ்கோ பிராங்கோவிற்கு ஏகமனதாக ஆதரவு அளித்தன. சோவியத் யூனியன் (ஒற்றுப்பட்ட ரஷ்யா) மட்டும் சித்தாந்த ரீதியாக இடதுசாரிகளுக்கு தங்களின் ஆதரவை கொடுத்தது.

இந்தப் போரில் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஜெர்மனியும் சோவியத் யூனியனும் தங்களது போர்க்கருவிகளை சோதிக்க இந்தப் போரை பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் போரின்போது ஜெர்னீகா என்னும் அதிபயங்கர குண்டுகள் வீசப்பட்டன. இந்தக் குண்டுக்கு பொதுமக்கள் பலர் பலியாகினர்.

இந்தப் போரை முன்னின்று நடத்தியவர் கிளர்ச்சியாளரான பிரான்சிஸ்கோ பிராங்கோ. இவர் கைகள் ரத்தக்கறை படிந்தவை என்று இடதுசாரிகள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன. இந்த நிலையில் இவரின் கல்லறை இருப்பதாகக் கருதப்படும் அல்முதேனா கதீட்ரல் பகுதியிலிருந்து இவரின் கல்லறை அகற்றப்படவுள்ளது.

இதற்கு அந்நாட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கிவிட்டது. முன்னதாக பிரான்சிஸ்கோவின் உறவினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனை நீதிபதிகள் நிராகரித்தனர். ஸ்பெயின் நாட்டில் தற்போது இடதுசாரிகள் வலிமைப்பெற்றுள்ளனர். அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த மாதம் (நவம்பர்) 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் வாக்கு வங்கி அரசியலை மனதில் கொண்டு இடதுசாரிகள் இவ்வாறு நடந்துகொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

இதையும் படிங்க: Yellow Vest Protest: மஞ்சள் ஆடை போராட்டம்! - பாரிசில் 90 போ் கைது

ABOUT THE AUTHOR

...view details