தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உலக பயங்கரவாதி பட்டியலில் மசூத் அசார்; பிரான்ஸ் வரவேற்பு - mazood azar

பாரிஸ்: உலக பயங்கரவாதி பட்டியலில் மசூத் அசாரை சேர்த்து ஐநா அறிக்கை வெளியிட்டதற்கு பிரான்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது.

மசூத் அசார்

By

Published : May 2, 2019, 9:22 AM IST

பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமதின் தலைவர் மசூச் அசார். இவரை உலக பயங்கரவாதகளின் பட்டியில் நேற்று ஐநா சேர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னதாக, இந்த அமைப்பு புல்வாமாவில் தாக்குதல் நடத்தி இந்தியாவைச் சேர்ந்த 40 துணை ராணுவ வீரர்களை கொன்றது. இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்தியா மசூத் அசாரை உலக பயங்கரவாதிகளின் பட்டியிலில் சேர்க்க வலியுறுத்தியது. ஆனால் இதற்கு சீனா முட்டுகட்டை போட்ட வண்ணமே இருந்தது. உலக நாடுகள் அனைத்தும் கொடுத்த அழுத்தத்தின் பேரில் நேற்று ஐநா அவரை பயங்கரவாத பட்டியலில் சேர்த்தது.

இதனை பிரான்ஸ் அரசு வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, "மசூத் அசாரை உலக பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்த்ததை வரவேற்கிறோம். புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து எங்கள் அரசு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்தது. மார்ச் 15ஆம் தேதி அவரை நாங்கள் தேசிய அளவில் பயங்கரவாதியாக அறிவித்தோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details