தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

கொரோனா வைரஸ் எதிரொலி: பிரான்ஸ் நாட்டு பள்ளிகள் காலவரையற்று மூடல்! - கொரோனா வைரஸ்

பாரிஸ்: கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக, அடுத்த வாரம் முதல் நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளும் காலவரையற்று மூடப்படுவதாக, பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டு பள்ளிகள் காலவரையற்று மூடல்!
பிரான்ஸ் நாட்டு பள்ளிகள் காலவரையற்று மூடல்!

By

Published : Mar 13, 2020, 10:18 AM IST

உலகளவில் கோவிட்-19 (கொரோனா) வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், சீனா, இந்தியா, இத்தாலி, தென்கொரியா ஆகிய உலக நாடுகள் அனைத்தும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

நாளுக்கு நாள் ஒவ்வொரு நாடுகளுக்கும் பரவும் கொரோனா வைரஸ், தற்போது பிரான்ஸ் நாட்டிலும் தனது கோரத் தாண்டவதைக் காட்டத் தொடங்கியுள்ளது.

பிரான்ஸ் நாட்டில், கொரோனா வைரஸால் 2,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தொற்றால், இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்று மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக, பிரான்ஸ் நாட்டில் அனைத்து பள்ளிகளும் காலவரையற்று மூடப்படுவதாக, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு அவர் ஆற்றிய உரையில்," கொரோனா வைரஸுக்கு, இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றால், ஏறக்குறைய 2,900 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

வைரஸ் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும்போதிலும், அதன் தாக்கம் தொடருகிறது. இதன் காரணமாக, வழக்கம் போல் நாம் அன்றாடப் பணிகளை மேற்கொள்வது சிரமம் ஆகும்.

வைரஸ் தொற்று மேற்கொண்டு பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக, நாட்டிலுள்ள அனைத்து குழந்தைகள் காப்பகங்கள், பள்ளிகள், நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் திங்கள்கிழமை முதல் காலவரையற்று மூடப்படுகிறது.

மறு அறிவிப்பு வரும்வரை திங்கள்கிழமை முதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட வேண்டும். கொரோனா வைரஸ், நூற்றாண்டுகளில் பிரான்ஸ் நாட்டின் மிகக் கடுமையான சுகாதார நெருக்கடியாகும். இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை. ஏனெனில் நாடு சுகாதார நெருக்கடியில் முதல் கட்டத்தில்தான் இருக்கிறது. இருந்தபோதிலும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 70 வயதுக்கு மேற்பட்டோர் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்துகிறேன். தொற்று நோயால் ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து, அந்நாடு வேகமாகவும், வலுவாகவும் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் உரையாற்றினார்.

இதையும் படிங்க: கொரோனா எதிரொலி: 15 இலங்கை மீனவர்களை விடுவிக்க முடிவு

ABOUT THE AUTHOR

...view details