தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'அணு சக்தியால் இயங்கும் விமானத்தை உருவாக்கவுள்ளோம்' - பிரான்ஸ் அதிபர்! - அணு சக்தியால் இயங்கும் விமானத்தை உருவாக்கவுள்ளோம்

பாரீஸ்: விமானத்திற்கு மாற்றாக புதிதாக அணு சக்தியால் இயங்கும் விமானத்தை உருவாக்கிட முடிவு செய்துள்ளோம் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அதிபர்
பிரான்ஸ் அதிபர்

By

Published : Dec 9, 2020, 5:55 PM IST

பாரீஸில் பர்கண்டி டவுன் ஆஃப் லு க்ரூசாட் பகுதியில் உள்ள ஒரு அணுசக்தி நிலையத்தில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, அவர் கூறுகையில், " பிரான்ஸ் நாடு ஒரு பெரிய சக்தியாக திகழ்வதில்,அணு சக்தி துறை முக்கிய பங்கு வகிக்கிறது.

சக்திவாய்ந்த விமானத்தை வைத்திருப்பது பிரான்ஸ் மீதான உலகளாவிய செல்வாக்கை அதிகரிக்கும். உலகளவில் ஒரு சில நாடுகள் மட்டுமே, மிகப்பெரிய விமானங்களை வைத்துள்ளனர்.

எனவே, சார்லஸ் டி கோலே விமானத்திற்கு மாற்றாக புதிதாக அணு சக்தியால் இயங்கும் விமானத்தை உருவாக்கிட முடிவு செய்துள்ளோம்.

இந்தப் புதிய விமானம் சுமார் 70 ஆயிடம் டன் எடையும் 300 மீட்டர் நீளமும் கொண்டது. முந்தைய சார்லஸ் டி கோல்லின் அளவை விட 1.5 மடங்கு பெரிதாக இருக்கும்.

சார்லஸ் விமானம் தற்போது ஈராக், சிரியாவில் சர்வதேச ராணுவ நடவடிக்கைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்படவுள்ள இந்த புதிய அணுசக்தி விமானம், அடுத்த தலைமுறைக்கான போர் விமானமாக திகழ்வது மட்டுமின்றி 2080ஆம் ஆண்டு வரை செயலாற்றும் வகையில் வடிவமைக்கவுள்ளனர்" எனத் தெரிவித்தார்

இந்த விமானத்தின் விலை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆனால், 7 பில்லியன் யூரோஸ்( 8.5 பில்லியன் டாலர்) இருக்கும் என உள்ளூர் உடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அணுசக்தி துறையில் 500 மில்லியன் யூரோ முதலீடு மற்றும் அதை நவீனமயமாக்குவதற்கு ஒரு தனி நிதி ஆகியவற்றை வழங்குவதாக மக்ரோன் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details