பாரிஸ்: இஸ்லாமிய பயங்கரவாத்திற்கு எதிரான நாடு தழுவிய பரப்புரையின் கீழ் பிரான்ஸில் ஒன்பது இஸ்லாமிய வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் தெரிவித்தார்.
பிரான்ஸில் 9 இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் மூடல்! - பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின்
பிரிவினைவாதத்திற்கு எதிராக தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பிரான்ஸ், இஸ்லாமிய மதத்திற்கு எதிரான நாடு தழுவிய பரப்புரையின் கீழ் அந்நாட்டில் உள்ள ஒன்பது வழிபாட்டுத் தலங்களை மூடியுள்ளது.
இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் "குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமரின் உத்தரவுகளுக்கு ஏற்ப இஸ்லாமிய பிரிவினைவாதத்திற்கு எதிராக நாங்கள் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். சிறப்பு கண்காணிப்பின் கீழ் உள்ள 18 வழிபாட்டு தலங்களில் தற்போது ஒன்பது தலங்கள் பேரில் மூடப்பட்டுள்ளன" என்று தெரிவித்துள்ளார்.
முஹம்மது நபியின் கார்ட்டூன்களை தனது மாணவர்களுக்குக் காட்டிய வரலாற்று ஆசிரியரான சாமுவேல் பாட்டி என்பவர் கடந்த அக்டோபர் மாதம் பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பின்னர் இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிரான பரப்புரையை பிரான்ஸ் தீவிரப்படுத்தியுள்ளது.