தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

வடக்கு ஸ்பெயினின் நான்கு நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன! - கட்டலோனியாவின் சுகாதார அமைச்சர் ஆல்பா வெர்ஜஸ்

மாட்ரிட்: கோவிட் 19 (கொரொனா) தொற்று காரணமாக ஸ்பெயினின் வடகிழக்கு கேட்டலோனியா பிராந்தியத்தில் உள்ள நான்கு நகரங்கள் நேற்று (மார்ச் 12) வியாழக்கிழமை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

four towns in northern spain quarantined
வடக்கு ஸ்பெயினில் நான்கு நகரங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

By

Published : Mar 13, 2020, 9:01 AM IST

இகுவாலடா, ஓடெனா, சாண்டா மார்கரிடா டி மோன்ட்புய், விலியனோவா டெல் கேமி ஆகிய பகுதிகளில் வசிக்கும் 66,000 குடியிருப்புவாசிகள் "தங்கள் நகர்ப்புறத்தைை விட்டு வெளியேற முடியாது" என்றாலும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியும் என்று கட்டலோனியாவின் ஆளுநரின் அறிவுறுத்தல்களை மேற்கோளிட்டு ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், பிராந்திய தலைநகரான பார்சிலோனாவிலிருந்து 70 கிலோமீட்டர் (40 மைல்) தொலைவில் உள்ள 40,000 குடியிருப்புவாசிகள் வசிக்கும் இகுவாலடா மீது அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாக கட்டலோனியாவின் சுகாதார அமைச்சர் ஆல்பா வெர்ஜஸ் தெரிவித்தார்.

மேலும், நகரில் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை கடந்த புதன்கிழமை 38ஆக இருந்த நிலையில் தற்போது 58ஆக அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details