தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சிரித்தபடியே முன்னாள் ராணுவ வீரருக்கு  நல்லடக்கம் - இறுதி ஆசையை நிறைவேற்றிய உறவினர்கள்! - latest ireland death news

அயர்லாந்தில் தனது இறுதிச் சடங்கில் அனைவரும் சிரிக்க வேண்டும் என்று முன்னாள் ராணுவ வீரர் கூறிய வார்த்தையை, அவரது உறவினர்கள் நிறைவேற்றியுள்ளனர்.

former soldier Shay Bradley death, அயர்லாந்து இறுதிச் சடங்கு

By

Published : Oct 15, 2019, 4:09 PM IST

அயர்லாந்து டப்ளின் நகரைச் சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் ஷே பிராட்லி. இவர் தனது உறவினர்களிடம் தான் உயிரிழந்து விட்டால் இறுதிச் சடங்கில் அனைவரும் சிரிக்க வேண்டும் என்று வித்தியாசமான ஆசையைக் கூறியுள்ளார். இந்நிலையில் அவர் கடந்த 8ஆம் தேதி உயிரிழந்தார். அப்போது பிராட்லியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட அவரது உறவினர்கள் சிரித்தபடியே இருந்தனர்.

இதனையடுத்து சவப்பெட்டியில் வைத்திருந்த ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ஒலிக்கீற்றை அனைவரும் கேட்கும்படி போட்டனர். அதில், தான் இறந்ததைத் தன்னால் நம்பமுடியவில்லை எனவும்; தன்னுடைய ஆசையை நிறைவேற்றிய அனைவருக்கும் நன்றி என்றும் ஒலித்தது. பின்னர் அவரின் உடலை உறவினர்கள் நல்லடக்கம் செய்தனர்.
இதையும் படிங்க: 'எனக்கு இரண்டு டிக்கெட் வேணும் பிகிலே...ராயப்பன் அந்தர் மாஸ்' - ரஸல் அர்னால்ட்!

ABOUT THE AUTHOR

...view details