உலக நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. கரோனாவால் ஆயிரக்கணக்கானோரை இழந்த சில முன்னணி நாடுகள், கரோனாவின் தாக்கம் குறைந்து பழைய நிலைக்குத் திரும்பி வருகின்றன.
நாட்டில் ஊரடங்கில் பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் வைரஸுக்கான தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில், உலக நாட்டின் பல விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், லண்டனில் கொலம்பியா மெயில்மேன் பள்ளி நடத்திய ஆய்வின்படி, 'கரோனா தொற்றுடன் வறுமை இணைந்து புயலாக உருவெடுத்துள்ளது. இதுவரை உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்பு உள்ளவர்கள் தான் அதிகளவில் கரோனாவால் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளனர். ஆனால், தற்போது வறுமை இணைந்து கரோனா உயிரிழப்புகளை அதிகரித்துள்ளது.
கரோனாவுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையான ஊரடங்கு, தகுந்த இடைவெளியைப் பின்பற்றுதல் போன்றவற்றில் மட்டுமே கவனம் செலுத்தியதால், ஏழைகளுக்கான சுகாதார சேவைகள் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, உணவுப் பாதுகாப்பின்மை, வேலையின்மை இரண்டும் இறப்பு விழுக்காடை அதிகரித்துள்ளன. இச்சிக்கலைச் சமாளிக்க சிறந்த தரவு சார்ந்த அணுகுமுறையே நல்லது. மேலும் இறப்பு விழுக்காடைக் குறைக்க ஏழைகளுக்கு நிவாரணத் தொகை வழங்குவதன் மூலம் பொருளாதாரப் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்" எனவும் வலியுறுத்தியுள்ளனர்.